காஞ்சிபுரத்தில் பரபரப்பு; சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து..!
Massive Fire Accident at the Thenampakkam Warehouse in Kanchipuram
சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், புதிய பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட தேனம்பாக்கம் பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில், அதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பழுப்புகள் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், கரும்புகை வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக இதுகுறித்து அப்பகுதியினர் புகார் அளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தது தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து, இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த கிடங்கு அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் அங்கு வந்த மதுபிரியர்கள் யாரேனும் தீவைத்து இருக்கலாம் என எதிர்பார்த்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Massive Fire Accident at the Thenampakkam Warehouse in Kanchipuram