Sofa Model ஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல; உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


''இந்த ஆட்சியில, போலீஸாலயும் பாதுகாப்பு இல்லை. போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை. ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க காவல்துறையை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யணும்''  என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''சென்னை கோடம்பாக்கத்துல காவலர் உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்கின சம்பவம் அதிர்ச்சியை தருது. காவலரிடம் இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.

இதுமட்டுமல்ல, வேளச்சேரியில நடைபயிற்சி போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு. கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.

இந்த ஆட்சியில, போலீஸாலயும் பாதுகாப்பு இல்லை. போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை. ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க காவல்துறையை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யணும்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin states that under the TVK regime even the police have no security


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->