தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாஸ் பிளான்...! உச்ச நீதிமன்றத்தில் திடீர் கேவியட் மனு தாக்கல்...! - பின்னணி என்ன...?
Mass plan 4 former MLAs who joined Tvk Sudden caveat petition filed Supreme Court What background
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும், அதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எடுத்துள்ள சட்ட நடவடிக்கையும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம். சீனிவாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், த.வெ.க. அரசுக்கு சட்டமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில் கடந்த 13-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றாலும், அதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை உறுதி செய்வதற்காக அரசியல் பேரங்கள் நடைபெற்றதாக கூறப்படும் புகார்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறும் குதிரைப் பேர அரசியலை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தனித்துவமான வழிகாட்டுதல்களை வகுக்கும் வரையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மேற்கண்ட நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்போது, தங்களது தரப்பின் விளக்கங்களையும் வாதங்களையும் கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவுகளையோ அல்லது தீர்ப்புகளையோ பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தற்போது நீதிமன்ற அரங்கிலும் அரசியல் களத்திலும் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mass plan 4 former MLAs who joined Tvk Sudden caveat petition filed Supreme Court What background