ஒருவாரத்தில் திருமணம்.. மணமகள் வீட்டில் விருந்து சாப்பிட்ட மாப்பிள்ளை ஏற்பட்ட துயர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை பார்த்த பொழுது அறிமுகமாகி காதல் மலர்ந்துள்ளது. 

இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்திடம் காதலை கூறி திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. எனவே கடந்த 9ஆம் தேதி விருந்திற்காக மணமகன் மணமகளுடைய வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த மணமகளுடைய வீட்டினர் வயிறு நிறைய சாப்பாடு போட்டுள்ளனர். அவரும் நிறைய சாப்பிட்டு திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். பின்னர் ,உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மீன்குழம்பு சாப்பிட்டு உயிரிழந்ததால் அவருக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage boy death in ariyalur


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal