தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்! போலீசார் விசாரணை!
mans body found rotting near railway tracks
கோயம்பத்தூர், வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை-கேரளா ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
பின்னர் வாலிபரின் உடலை போலீசார் மீட்டு கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார், அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் வயது சுமார் 45 இருக்கலாம் எனவும் இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தின் அருகே ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mans body found rotting near railway tracks