சனாதன சர்ச்சை || இவர்களைப் நாட்டை விட்டே விரட்ட வேண்டும்! - மன்னார்குடி ஜீயர் ஆவேசம்!
Mannarkudi jeeyar said who criticize Sanatana should be expelled from country
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழக அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அரசாங்கத்தில் ஓர் அங்கம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சாதி, மதம் பாகுபாடு பார்க்கக் கூடாது. எல்லா சாதியும், மதமும் ஒன்று என்று மசூதியில் அல்லது தேவாலயத்தில் உதயநிதியால் பேச முடியுமா? சாதி, மதம் பாகுபாடு இல்லை என்று கூறுபவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது சாதி இல்லாதவர் என்று பிரகடனம் செய்ய வேண்டியதுதானே?
அனைத்து சமூகத்தினரும் கோயில் பிரவேசம், பூஜைகளில் பங்கேற்பை 1,000 ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் நிகழ்த்திக் காட்டிவிட்டார். ஆனால் இவர்கள் செய்தது போல பேசி வருகின்றனர்.

சனாதனதர்மத்தை விமர்சிப்பவர்களையும், இந்துக்களுக்கு விரோதமாகப் பேசுபவர்களையும் இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும். சனாதன தர்மம் என்பத பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதில் சாதி பாகுபாடு கிடையாது. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து உருவானது தான் ஜெயின், புத்தம், பார்சி போன்ற மதங்கள். சனாதனம்தான் அந்த மதங்களின் ஆணிவேர்" என ஆவேசமாக பேசி உள்ளார்.
English Summary
Mannarkudi jeeyar said who criticize Sanatana should be expelled from country