கண்டித்த மனைவி., சரக்குதான் முக்கியம் உயிரை விட்ட கணவன்.! - Seithipunal
Seithipunal


மது அருந்துவதை மனைவி கண்டித்த காரணத்தினால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள எம் புதுப்பட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு பாண்டியன். இவருக்கு வயது 26 ஆகிறது. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி மாலினி. 

இந்நிலையில், புதுப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து உள்ளது. கோவில் திருவிழா முடிந்த உடன் திருநாவுக்கரசு தனது சகோதரர் ராஜகண்ணப்பன் உடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டுக்கு திருநாவுக்கரசு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

திருநாவுக்கரசு மது அருந்தி வந்ததைக் கண்ட மாலினி அவரை கண்டித்துள்ளார். இனி நீங்கள் மருந்து அருந்த கூடாது என்றும். வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, மனைவி மாலினியை தாக்கி விட்டு தனது அறைக்கு சென்று விட்டு படுத்துக் கொண்டார்.

அப்போது திருநாவுக்கரசு பாண்டியனின் தம்பி ராஜகண்ணப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் மாலினி நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். இதனையடுத்து நான் சமாதானம் செய்து வைக்கிறேன். அண்ணனை நான் அழைத்து வருகிறேன் என்று கூறி திருநாவுக்கரசை பார்க்க அறைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு திருநாவுக்கரசு பாண்டியன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சிக்குள்ளான ராஜகண்ணப்பன் உடனடியாக சென்று அவரை காப்பாற்ற முயல, அதற்குள் திருநாவுக்கரசு பாண்டியன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் திருநாவுக்கரசர் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man suicide for drink


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal