மதுரை : மதுவில் தண்ணீருக்கு பதில் திண்ணைரைக் கலந்து குடித்து கோவில் பூசாரி உயிரிழப்பு.!!
man died for mixing thinner with liquar drink in madurai
மதுவில் தண்ணீருக்கு பதில் திண்ணைரைக் கலந்து குடித்து கோவில் பூசாரி உயிரிழப்பு.!!
மதுரை மாவட்டத்தில் உள்ள கிடாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் பனையன். இவர் அதேபகுதியில் உள்ள பெரியநாச்சியம்மன் கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக வர்ணம் தீட்டும் பணிகள் நடைப்பெற்று வந்தது. அந்தப் பணிகளில் பனையனின் உறவினர் வீரணன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வீரணன் நேற்று முன்தினம் கிடாரிப்பட்டியில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்கி வந்துள்ளார். இந்த மதுவை பனையன்,வீரணன், பதினாறு வயது சிறுவன் உள்பட மொத்தம் நான்கு பேர் சேர்ந்து குடித்துள்ளனர். ஆனால், மது அருந்திய சிறிது நேரத்தில் பூசாரி பனையன் உள்பட மூன்று பேர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளனர். ஆனால் வீரணனுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் மயங்கியவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இவர்களில் பூசாரி பனையனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவரை மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பனையன் உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று வீரணனிடம் விசாரணை நடத்தினர். அதில், மதுவில் தண்ணீருக்கு பதில், பெயிண்டில் கலக்கும் தின்னரை கலந்து அருந்தியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man died for mixing thinner with liquar drink in madurai