விஜயை பார்க்க போலி அடையாள அட்டையுடன் வந்த நபர் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவரை சந்திப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், விஜய்யின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார். 

அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை பார்க்க கேட்ட போது அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் இருந்து அந்த பட்டையை பறித்து அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man come with duplicate id card in trichy airport for see vijay


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->