கடலூர் : நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த நீதிமன்ற ஊழியர் கைது.!! - Seithipunal
Seithipunal


கடலூர் : நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த நீதிமன்ற ஊழியர் கைது.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற எண். மூன்றில் ரெக்கார்டு கிளார்க்காக பணிபுரிந்து வருபவர் கலைச்செழியன். இவர் பொதுமக்களிடம் தனக்கு நிறைய நீதிபதிகளை தெரியும் என்றும், எல்லோரும் தனக்கு நன்கு பழக்கம் உடையவர்கள் என்றும் அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் அவர் தெரிவித்து வந்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய ஸ்ரீராம் என்ற இளைஞர் தனக்கு  நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருமாறு கூறி மூன்று லட்சம் பணத்தை கலைச்செழியனிடம்  கொடுத்துள்ளார். அதேபோல் சண்முகசுந்தரம் என்ற இளைஞரும் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டு 2.50 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார்.

இரண்டு இளைஞர்களிடம் இருந்தும் மொத்தம் 5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட கலைச்செழியன், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீராம், போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார்   உடனடியாக கலைச்செழியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக நீதிமன்ற ஊழியர் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money fraud in cuddalore


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->