ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது!
Man arrested for molesting teenage girl on moving train
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சேலம் வழியாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் எஸ்-6 முன்பதிவு பெட்டியில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த அக்காள்-தங்கை இரண்டுபேர் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் இருந்த இருக்கையின் அருகில் மற்றொரு இருக்கையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருந்துள்ளார்.
திருப்பூர் பகுதியில் ரெயில் வந்தபோது, அந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணை உடல் பகுதிகளில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த வாலிபரை கண்டித்தும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து உடனே ஆன்லைன் மூலம் ரெயில்வே போலீசில் சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சேலம் ரெயில்வே போலீசார் சென்று விசாரித்தனர்.
அப்போது, ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் முறையாக புகார் பெற்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த வாலிபர் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த முன்னாகுமார் (வயது 32) என்பது தெரியவந்தது. . பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரை சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
Man arrested for molesting teenage girl on moving train