ஓசூரில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
Minister Chakrapani inspects Hosur
கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்,மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 582.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி அன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே. என். நேரு அவர்கள் , உணவு மற்றும் உணவுப்பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓசூர் பகுதியில் உள்ள சாந்தபுரம், மற்றும் ராமநாயகன் ஏரி, என இரண்டு கட்டங்களாக நடைபெற்று வரும் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பின்னர், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள தளவாடங்கள்,மற்றும் அது சம்மந்தமான பொருட்கள், திட்ட அலுவலகம் உள்ளிட்டவற்றை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னர், பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுரை வழங்கினார்.இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ்குமார்,மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஒய் .பிரகாஷ்,மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary
Minister Chakrapani inspects Hosur