திருநங்கைகள் தினம்.. பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!
Transgender Day District Collector felicitates the prize
திருவள்ளூரில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு பாட்டு, பேச்சு,நடனம், அழகி போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் .
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் இணைந்து நடத்திய பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப்போட்டி மற்றும் அழகி போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் இணைந்து நடத்திய பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப்போட்டி மற்றும் அழகி போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டார்கள் வெற்றிப் பெற்ற திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
இதில் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி , சமூகநல அலுவலர் வாசுகி, திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் சாந்தி, உதவி திட்ட அலுவலர்கள் கிறிஸ்டி, சரவணன், சீனிவாசன், சந்திரகுமார், கார்த்திகேயன், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Transgender Day District Collector felicitates the prize