டாப்ஸ்லிப் மலையேறி கேரளா மருத்துவர் உயிரிழப்பு.!!
kerala doctor died for trekking in topslip
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மற்றும் பாகில் தயூப் ராஜ் ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேறியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் மருத்துவர் அஜ்சல் சைன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மற்றொருவரான பாகில் தாயூப் ராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளா மருத்துவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kerala doctor died for trekking in topslip