நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!
shanthi goundamani Death
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றவர் கவுண்டமணி.
அவரது காமெடி காட்சிகள் பல திரைப்படங்களுக்கு வெற்றியைத் தேடி வந்துள்ளன.
சமீபத்தில் அவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் வெளியான நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67), உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
அவரது மறைவு குடும்பத்திலும் திரையுலகத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி அஞ்சலிக்காக அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.