8 கோடி மக்களுக்கு இலவச தற்காப்பு கலை பயிற்சி..உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் அறிவிப்பு!
Free martial arts training for 8 crore people World Karate Masters Association
8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உள்ளதாக உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சங்கத்தின் தலைவர் சு.பாலாமுருகன் தலைமையில் நடைபெற்றது.நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் லஸ்சர் சென்னை , தமிழ்செல்வன் கரூர் , மோகன் திருவள்ளூர் , Dr .தமிழரசன் சென்னை , சுரேந்திரன் திருத்தணி ,மணிகண்டன் திருச்சி , செந்தில் ஆனந்த் திருச்செந்தூர் ஆகியோர் உடன் இருந்தனர்.
உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் தலைவர் சு. பாலமுருகன் செய்தியாளரிடம் கூறியதாவது,நாங்கள் சர்வதேச கராத்தே பயிற்றுனர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் உலகளவில் 55 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், இந்திய அரசியலமைப்பு, தேசிய அமைச்சரவை, மாநில அமைச்சரவை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு மட்டங்களில் பாதுகாப்பு இருந்தபோதிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நம் ஒவ்வொருவரின் கடமையும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.எனவே சுய பாதுகாப்பு மேம்படுத்தும் தற்காப்பு கலையை கற்பிக்கும் ஆசிரியர்கள் என்ற முறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கராத்தே மாஸ்டர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த தற்கால்ப்பு கலையை பயின்று அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் மேலும் அவர் கூறுகையில் இந்த தற்காப்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற விருப்பமுள்ளவர்கள் 9790994917 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
English Summary
Free martial arts training for 8 crore people World Karate Masters Association