சி.எஸ்.கே அணியில் இருந்து இளம் வீரர் விலகல்: உள்ளே வந்த உர்வில் படேல்..!
Urvil Patel came in after the young player left the CSK team
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல் போட்டியின் 18-வது சீசன் நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் கடந்த 03-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் 02 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன், சென்னை அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சென்னை அணியின் இளம் வீரர் வான்ஷ் பேடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். வான்ஷ் பேடிக்கு பதிலாக இந்திய வீரர் உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
English Summary
Urvil Patel came in after the young player left the CSK team