வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Release date of Vaibhav Chennai City Gangsters announced
விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.' இந்த படத்தில் படம் நடிகர் வைபவ், கதாநாயகனை நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இந்த படத்தில், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பலராலும் பாராட்டை பெற்றவர் வைபவ். பின்னர், 'கப்பல், மேயாத மான்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதனைதொடர்ந்து, சமீபத்தில் 'பெருசு' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Release date of Vaibhav Chennai City Gangsters announced