யூடியூபர் டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 

''எனக்கு பாஸ்போர்ட் கேட்டு கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தேன். இதற்கிடையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில், நான் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது. இதுகுறித்து என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என் என் ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால், என்னுடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நான் தற்போது சினிமாவில் நடிப்பதால், வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள வேண்டியதுள்ளது. அதனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரர் வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன என்று கூறியுள்ளனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மீது இதுவரை எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணையை ஜூன் 02-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How many cases are pending against YouTuber TTF Vasan The court has ordered the police to file a report


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->