ராகுல்காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை தொடர்பான மனுவை அலகாபாத் நீதிமன்றம் முடித்துவைப்பு..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர் விக்னேஷ் ஷிஷிர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இதை நிரூபிக்க தேவையான இங்கிலாந்து அரசின் சில இ-மெயில்களும், ஆவணங்களும் என்னிடம் உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார். அத்துடன், அவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்றும், எம்.பி. பதவி வகிக்க முடியாது எனவும்,  2024-ஆம் ஆண்டில் அவர் பெற்ற மக்களவை தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். 


குறித்த மனு மீதான வழக்கு கடந்த நவம்பர் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு பதில் அளிக்க அலகாபாத் உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, ராகுல்காந்தி குடியுரிமை குறித்து இங்கிலாந்து அரசிடம் தகவல் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்.

மேலும்ந, கடந்த 21-ந் தேதி நடந்த விசாரணையின் போதும், அதே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக மே 05-ந் தேதி வரை மத்திய அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை கால அவகாசம் அளித்தது.

இந்நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ராஜீவ்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

அதனால் நீதிபதிகள் மனுவை முடித்து வைத்துள்ளனர். இந்த மனு குறித்து  நீதிபதிகள் கூறியதாவது:- மனுதாரரின் புகாருக்கு தீர்வு காண மத்திய அரசால் எந்த கால வரையறையும் அளிக்க முடியவில்லை. எனவே, மனுவை நிலுவையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை. மனுதாரர் மாற்று வழிமுறைகளை ஆராயலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Allahabad court closes Rahul Gandhi petition regarding UK citizenship


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->