யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது..!
The teaser of Yogi Babu Jora Kaiya Thattunga has been released
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் யோகி பாபு. நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் இவரின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. அதனை தொடர்ந்து மன்டேலா படத்தில் யோகி பாபுவின் நடிப்பு அனைவரும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது இவர் ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதாவது மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது
இப்படம் எதிர்வரும் மே மாதம் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=hDkZ5qtL4cI
English Summary
The teaser of Yogi Babu Jora Kaiya Thattunga has been released