சந்தானம் என்னுடனும், ஆர்யாவுடன் இணைந்து, காமெடி படங்களிலும் நடிக்க வேண்டும்: சிம்பு பேச்சு..! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நாடகராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் சந்தானம். இவர் நடித்துள்ள DD Next Level படத்தின் ரிலீஸ்க்கு முந்தைய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிலம்பரசன் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- 

STR 49 படத்தில் நானும் சந்தானமும் மீண்டும் இணைந்து நடிக்கிறோம். தற்போது காமெடி படங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. பெரிய ஹீரோக்களிடம் ஆக்ஷன் மற்றும் ஆக்ரோசம் பொன்றவற்றை எதிர்பார்ப்பதுதான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில் ஜாலியான படங்களும் வர வேண்டும். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்தேன். நல்ல படம். படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் அங்கு குறிப்பிடுகையில், சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்று விட்டார். அவர் என்னுடனும், ஆர்யாவுடன் இணைந்து, சில படங்களை தேர்வு செய்து காமெடி போன்ற படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும், அவரை இனிமேல் அதிகமான படத்தில் பார்க்கலாம் என்றும் சிம்பு பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Santhanam should act in comedy films with me and Arya Simbu speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->