நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி..!
TVK leader Vijay visited the spot and paid his respects for the death of actor Goundamani wife
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சத்தியராஜ், செந்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், கவுண்டமனியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன், இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
TVK leader Vijay visited the spot and paid his respects for the death of actor Goundamani wife