அஜித் படத்தில் நடிக்க மறுத்த டிடி; காரணம் என்ன காரணம் தெரியுமா..?
DD refused to act in Ajiths film Do you know the reason
கடந்த 2014-ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்'. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
வேதாளம் படத்தில் நடிகை லட்சுமி மேனன் அஜித் குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க முதலில் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தான் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தாராம். இதனை அவரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய டிடி, "2014-இல் 'வேதாளம்' படத்தில் நடிக்கும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த்தால் வேதாளம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அது அஜித் சாரின் படம் என்பது முதலில் தனக்கு தெரியாது என்றும், அதன்பின் தான் தனக்கு அது அஜித் சார் படம் என தெரிய வந்ததது என்று கூறியுள்ளார்.
English Summary
DD refused to act in Ajiths film Do you know the reason