ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி.!
2 peoples drowned water in hogenakkal
தற்போது கோடைகாலம் தொடங்கி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா தளங்களில் பொதுமக்களின் வரத்து அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லில் இன்று கூட்டம் அதிகளவு காணப்பட்டது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 20 இளைஞர்கள் ஒரு சுற்றுலா வாகனத்தில் இன்று ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
அங்கு அதிக சுழல் உள்ள பகுதியான சேமலை தோட்டம் பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் விளையாட்டு போக்கில் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுழலில் சிக்கிய இளைஞர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
2 peoples drowned water in hogenakkal