மதுபோதையில் நடனம் - கோவில் திருவிழாவில் 12-ஆம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை.!!
12 student murder in karoor kulithalai
குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே கோவில் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் போது இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளனர். அவர்களை தட்டிக்கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஷியாம் சுந்தர் என்ற 17வயதுள்ள 12-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த மேலும் இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 student murder in karoor kulithalai