42 வயது பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, 'மகளின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பரப்பிவிடுவேன்' என்று மிரட்டல் விடுத்த நபர்: தேங்காய் குடோனில் கைது..!
Man arrested at coconut warehouse for sending pornographic videos to 42 year old woman and threatening her
நேற்றுமுன்தினம் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் 42 வயது பெண் ஒருவர், அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, தினமும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிவந்த நிலையில், திடீரென்று தன் மீது சந்தேகம் ஏற்பட்டு இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும் தான் பேசவேண்டும் என்று அந்த நபர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஆபாச வீடியோக்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து இதேபோல் அந்த நபரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உனது மகளின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பிவிடுவேன் என்று மிரட்டல் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபி என்ற அண்ட் நபரின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டதாகவும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டு, புதிய செல்போன் நம்பரை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் கோபி, தனது அக்காவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவரை மிரட்டி தனது புதிய செல்போன் நம்பரை பெற்று மீண்டும் தொடர்புகொண்டு நீ என்னிடம் பழகி வந்ததை உன் கணவரிடம் தெரிவிப்பேன் என்று மிரட்டுகிறார் என்றும், மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும், கோபியை கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்துள்ளார். குறித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை அமைத்து கோபியின் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்துள்ளனர். அப்போது அந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று கோபியை கைது செய்துள்ளனர். விசாரணையில் கோபி சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட்டதாகவும். தற்போது தேங்காய் குடோனில் வேலை செய்து வருகிறதாகவும், இவரது மனைவி கருது வேறுபாடு காரணமாக கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபராது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
English Summary
Man arrested at coconut warehouse for sending pornographic videos to 42 year old woman and threatening her