மதுரையை கட்டுமான விவகாரம்! மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நிதியை ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத மத்திய அரசின் முதன்மை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மதுரையை கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்தான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC orders to submit Madurai AIIMS construction status report


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->