10 ரூபாய் விவகாரம் | டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆப்பு!
Madurai TASMAC Shop staffs suspended
மதுரை மாவட்டத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற 6 டாஸ்மார்க் பணியாளர்கள் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இது குறித்து டாஸ்மார்க் மதுபான கடையின் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
தங்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், இதனை தடுத்துநிறுத்தாமல் அரசு மவுனம் காப்பதாகவும் டாஸ்மார்க் மதுபான கடையின் வாடிக்கையாளர்கள் விமர்சித்து வந்தனர்.

இதனையடு அண்மைக் காலமாக டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில், இதுபோன்ற கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இந்நிலையில், மதுரையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து கூடுதலாக மதுபானங்களை பத்து ரூபாய், அதற்கும் கூடுதலாக விற்பனை செய்த புகாரின் பேரில், 6 டாஸ்மார்க் கடை பணியாளர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சின்னசாமி, கண்ணன், காமேஸ்வரன், ஜோதி ராமலிங்கம், வெங்கடேஸ்வரன் உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Madurai TASMAC Shop staffs suspended