மதுரையில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் | விருந்துக்கு அழைத்து மாமனார் கொடுத்த அதிர்ச்சி!
Madurai Love marriage couple issue piriya varathan
தனது மகளை திருமணம் காதலித்து திருமணம் செய்த இளைஞரை, விருந்து வைப்பதாக அழைத்து, காரில் இருந்து தள்ளிய பெற்றோர் மீது காதல் கணவன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கேகே நகர் பகுதியில் சேர்ந்த பிரியவரதன் என்ற 22 வயது இளைஞனும், மதுரை, சாத்தான்குடியை சேர்ந்த சினேகா என்ற 21 வயது இளம் பெண்ணும் சில பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும், வீட்டை விட்டு வெளியேறி கோவையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அங்கேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அண்மையில் பிரியவரதனின் தந்தை மகனை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
தந்தை சமாதானம் அடைந்து விட்டதாக எண்ணி காதல் மனைவி அழைத்துக்கொண்டு மகன் பிரியவரதன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மூன்று நாட்கள் ஒன்றாக குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்த புதுமண தம்பதிகள் குறித்து சினேகாவின் தந்தை ஜீவானந்தத்திற்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து ஜீவானந்தம் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பிரியவரதனின் வீட்டுக்கு வந்து, அவர்களின் வீட்டு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரு வழியாக இரு வீட்டாரும் தங்களது திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாக எண்ணிய காதல் தம்பதிகளுக்கு அடுத்து காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
பிரியவர்தன், சினேகா கார் மூலம் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டப்போது, மேலஉரப்பனூர் கண்மாய் அருகே பிரியவரதன் மற்றும் அவரின் தாய் இருவரையும் காரில் இருந்து ஜீவானந்தம் மற்றும் அவரின் உறவினர்கள் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியவரதன், தனது மனைவியை மீட்டுத் தருமாறு திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Madurai Love marriage couple issue piriya varathan