மீண்டும் கலவரத்தை கிளப்பிய ஜாதி மறுப்பு திருமணம்.! மதுரையில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கரும்பாலை பகுதியை சேர்ந்த சேர்ந்த ராமன் என்ற இளைஞர் பரவை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி முத்தரசி இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தங்களுடைய பெற்றோரிடம் அனுமதி கோரி இருக்கின்றனர். 

இதற்கு பெண்ணின் வீட்டினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மூன்று நாட்களுக்கு முன்பாக ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு இருக்கின்றனர். 

இதனை தொடர்ந்து பெண் வீட்டார் இருவருக்கும் போன் கால் மூலமாக கொலை மிரட்டல் எடுப்பதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அந்த தம்பதியினர் தஞ்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai inter caste marriage got so many issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->