குற்றாலத்தில் திடீரென கும்மியடிக்க துவங்கிய பெண்கள்.! வியப்பில் சுற்றுலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் துவங்கும். தற்போது இந்த வருடத்திற்கான சீசன் முடிவடைந்தாலும் மக்கள் வரத்து குறைவதில்லை. 

அதுபோல அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் விஷயமாக அமைந்துள்ளது. பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் இந்த அருவிகளை காண சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். 

மதுரை மாவட்டத்தில் இருக்கும் மஞ்சப்பட்டி கிராமத்தில் வசிக்கின்ற பெண்கள் சிலர் கும்பலாக இந்த அருவியை காண வந்தனர். அவர்கள், திடீரென்று ஐந்தருவிக்கு முன் நின்றவாறு கும்மியடிக்க ஆரம்பித்தனர். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து வியந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் கும்மி அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றன. 

நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு அந்த பெண்கள் கும்மி அடிப்பது காண்போர்க்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல பழனி கோவிலுக்கு சென்று விட்டு, பின்னர் திரும்பும்போது குற்றாலத்தில் இருக்கும் அனைத்து அருவிகளுக்கும் வந்து குளித்துவிட்டு அங்கே கும்மி அடிப்பது வழக்கம் என்று அவர்களில் சில பெண்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Girls clapping Dance in Thenkasi Courtalam water Falls


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->