1000 கோடி கடன் வாங்குனவனை விட்டுடுங்க.. ஏழைகளை என்னென்ன பாடு படுத்துறீங்க.. மதுரை நீதிபதிகள் உச்சக்கட்ட வேதனை.! - Seithipunal
Seithipunal


வட்டிக்கு வட்டி போடுவதை நியாயம் அற்றது என மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. 

வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை வசூலிப்பதை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதை திருப்ப பெற வேண்டும் என்ற மனுவானது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இது குறித்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், " பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயம் அற்றது. 

எந்த விதிகளின் அடிப்படையில் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் வழங்குகின்றன?. கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதால், அந்த தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகையை வசூல் செய்து வருகின்றனர். 

கடன் தொகையை வசூலிப்பதற்கு தனியார் குண்டர்களை வங்கிகள் நாடினால், கடன் கொடுக்காமலேயே இருந்து விடலாம். ரூபாய் 1000 கோடி கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக கடன் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் " என்று உச்சக்கட்ட வருத்தத்தை பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்கை 4 ஆம் தேதி தள்ளிவைத்து, இது குறித்து வங்கி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Court Feeling sad about Bank Loan Collection


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->