சாத்தான்குளம் கொலை வழக்கு; 09 தண்டனை கைதிகள் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசம்..! - Seithipunal
Seithipunal


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 09 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையின் போது கொல்லப்பட்டனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 09 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கின் முழு விசாரணையும் நிறைவடைந்ததையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு, தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தது. அப்போது குற்றவாளிகள் 09 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Bench of the High Court Grants Time to 9 Convicts to File Appeals in the Sathankulam Murder Case


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->