வைபவ் சூர்யவன்ஷி குறித்து பிசிசிஐ-க்கு அறிவுரை கூறிய முன்னணி பயிற்சியாளர்..!
Leading Coach Offers Advice to BCCI Regarding Vaibhav Suryavanshi
இந்திய 19 கிரிக்கெட் அணியின் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய அசாதார ஆட்டத்தில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகமாவது குறித்து, ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பிசிசிஐக்கு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நடப்பு 19 வது ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 07 போட்டிகளில் 254 ரன்கள் குவித்துள்ளார். இவரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், ''வைபவ் போன்ற இளம் திறமைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும்'' என்று பண்டிட் கூறியுள்ளார். அத்துடன், "அவருக்கு வாய்ப்பளிக்க இது சரியான நேரம்தான் என்றாலும், அவரை எப்போது களமிறக்க வேண்டும், எந்த அணிக்கு எதிராக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ கவனமாக இருக்க வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் என்பது கடும் அழுத்தங்கள் நிறைந்தது. எனவே, அவருக்குப் போதிய கால அவகாசமும், சுதந்திரமும் வழங்கி அவரை ஒரு சிறந்த வீரராக வளர்த்தெடுக்க வேண்டும்" என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன், வைபவ் சூர்யவன்ஷி மட்டுமன்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Leading Coach Offers Advice to BCCI Regarding Vaibhav Suryavanshi