குஜாரத் டைட்டன்ஸை வீழ்த்திய பெங்களூரு; புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்..! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). தேவ்தத் படிக்கல், விராட் கோலி இணைந்து ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தனர்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டம் பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீசியது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன், 58 பந்துகளில் சதம் விளாசினார். கேப்டன் ஷுப்மன் கில் 32, ஜாஸ் பட்லர் 24, ஹோல்டர் 23, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் எடுத்தனர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்க ஆட்டக்காரராக சாக்லட்க்கு பதிலாகக இன்று களமிறங்கிய ஜேக்கப் பெத்தல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் இணைந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதில் தேவ்தத் படிக்கல், 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி, 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜிதேஷ் சர்மா 10, கேப்டன் ரஜத் பட்டிதார் 08 ரன்களில் வெளியேறினர்.

இறுதியில், க்ருணால் பாண்டியா அதிரடியாக ஆடி, 12 பந்துகளில் 23 ரன்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது ஆர்சிபி முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bengaluru Defeats Gujarat Titans


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->