நிர்வாக திறமையே இல்லை! ஆர்எஸ்எஸ் வைத்த செக்!! அரசு மீது நீதிமன்றம் கடும் அதிருப்தி!!
MadrasHC order tn home secretary dgp appear in court
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நாட்டின் 76 வது சுதந்திர தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவையும் மீறி சில மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு நடந்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் "நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது" என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி "நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது.
நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததை இது காட்டுகிறது. எனவே இந்த மனு குறித்து 4 வாரங்களில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
English Summary
MadrasHC order tn home secretary dgp appear in court