வீட்டில் எதிர்ப்பு - மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.! - Seithipunal
Seithipunal


வீட்டில் எதிர்ப்பு - மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகள் சுபாஷினியும், விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த பஞ்சுராஜ் மகன் யஸ்வந்த்ராஜ் உள்ளிட்ட இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் யஸ்வந்த் ராஜ் மற்றும் சுபாஷினி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

அதன் பின்னர் இருவரும் கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீஸார் இரண்டு பேரின் பெற்றோரையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்து பேசினர். 

அப்போது, யஸ்வந்த்ராஜ் வீட்டில் அவரது திருமணத்தை ஏற்று கொண்டதையடுத்து போலீசார் காதல் ஜோடியை அவர்களுடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love couples took refuge in gopisetti palaiyam womans police station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->