ரூ.1.11 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் - போலீசாரின் வேட்டையில் சிக்கிய மாற்றுத்திறனாளி!
lottery tickets seized disable person arrested
தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி தெரு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கீழபாவூர் எஸ்.கே நகரைச் சேர்ந்த மாரிபாண்டி (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து அவரது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.11 லட்சம் மதிப்பிலான 2,700 லாட்டரி டிக்கெட் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவரை போலீசார் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த ரூ.1.11 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
lottery tickets seized disable person arrested