திருப்பதி செல்லும் வழியில் கொடூர விபத்து! சென்னையை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி!
Lorry Car Accident Andhra Chennai
ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே லாரி - கார் மோதி பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து காரில் திருப்பதி சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் டேங்கர் லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சென்னை சேர்ந்த மூன்று பேர் உடல் நசுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, சென்னையை சேர்ந்த மூன்று பேர் திருப்பதி நோக்கி பயணம் செய்துள்ளனர்.
இன்று காலை அவர்களின் கார் ஆந்திர மாநிலம், புத்தூர் அருகே தர்மாபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த ஆயில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக காரின் மீது மோதியது.
இதில் இரண்டு வாகனங்களும் சாலையிலிருந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி முன் பகுதி, காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கியது.
இதில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்தில் பலியான சென்னையில் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Lorry Car Accident Andhra Chennai