மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது?
local holiday in mayiladuthurai dustrict at tomarrow
மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் காவிரி துலா உற்சவம் நடைபெறும். மிகவும் புகழ் பெற்ற திருவிழாவான இங்கு பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அந்த வகையில், தற்போது ஐப்பசி மாதம் காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அதன் படி சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த தீர்த்தவாரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
English Summary
local holiday in mayiladuthurai dustrict at tomarrow