7ம்தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!
Local holiday for all schools and colleges on the 7th
7ம்தேதி விடுமுறைக்குப் பதிலாக 19ம்தேதி மூன்றாம் சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாகும் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. கோவிலில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் கோவில் நிதியில் இருந்து. ரூ.100 கோடி என ரூ.300 கோடியில் 90 சதவீத மெகா திட்ட வளாக பணிகள் நிறைவு பெற்று தக்கார் அருள் முருகன் தலைமையில் மகா கும்பாபிஷேகப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 12 கால யாக பூஜை நடக்கிறது. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா 7.7.2025, திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும், 7.7.2025 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ/ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.7.2025, மூன்றாம் சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Local holiday for all schools and colleges on the 7th