பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Life imprisonment for the man who murdered the woman Court delivers sensational verdict
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் முன் விரோதத்தின் காரணமாக ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, முன் விரோதத்தின் காரணமாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் சண்முகவேல் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்து, அவரின் சகோதரியை கொலை முயற்சி செய்தார். இது தொடர்பாக வழக்கு புலன் விசாரணையின் முடிந்து வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளி சண்முகவேலுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ராமலிங்கம் குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கினார்.
குற்றவாளிக்கு IPC 302-ன்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்,10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், விதிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறை தண்டனைகள் அனைத்தும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் எனவும், அவற்றை அனுபவித்து முடித்த பின் IPC 302-ன் கீழ் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை அமலுக்கு வரும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. , அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் , நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 22 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 72 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Life imprisonment for the man who murdered the woman Court delivers sensational verdict