லெஜண்டின் 'கிளீன்' அட்வைஸ்...! - அமையப்போகும் புதிய அரசு ஊழலற்ற ஆட்சியைத் தர வேண்டும்...! - Seithipunal
Seithipunal


வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் பங்கேற்க கும்பகோணம் வழியாக திருவாரூருக்கு சென்ற லெஜன்ட் சரவணன், தனியார் ஆடம்பர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.தான் நடித்துள்ள “லீடர்” மற்றும் “லெஜெண்ட்” திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், மூன்றாவது திரைப்படப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

அந்த படத்தில் மும்முக அதிரடி தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இயக்குநர் துரை செந்தில்குமார் மீண்டும் படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெற்ற வெற்றி, இளைஞர்களின் அரசியல் எழுச்சியின் வெளிப்பாடாகும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கிய இளைஞர் சக்தியே இன்று ஆட்சிமாற்றத்திற்கான பெரும் அலைவீச்சை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசு ஊழலற்ற நிர்வாகம், அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் மக்கள் நல பொருளாதாரக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து பேசிய அவர், அரசியலில் வெற்றி-தோல்வி நிரந்தரமல்ல என்றும், கால மாற்றத்தோடு அரசியல் சூழலும் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த லெஜன்ட் சரவணன், இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முழுமையாக காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.

விஜயை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் கூறினார்.போதை கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்த அவர், இதுபோன்ற குற்றங்களுக்கு விரைவான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், தாமதமில்லா நீதியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் குறித்து பேசிய அவர், தொழில்துறை தான் தனது முதன்மை கவனம் என்றாலும், மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், காலமும் சூழலும் ஏற்றிருந்தால் எதிர்காலத்தில் அரசியலிலும் செயல்பட தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குறித்து இயக்குநர் நெல்சனிடம் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், வாய்ப்பு அமைந்தால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் லெஜன்ட் சரவணன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legend clean advice new government formed should provide corruption free regime


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->