உயர்நீதிமன்ற நீதிபதி மறைவு - புதுவையில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை.!!
leave to puthuchery courts for high court justice dead
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத் பதவியேற்றார். இவர் பல்வேறு வழக்குகளை கையாண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் நீதிபதி சத்தியநாராயண பிரசாத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
-lv5ph.jpg)
இவரது இறப்பு நீதிபதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் உயிரிழப்பை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோன்று உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள புதுவை நீதிமன்றத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மறைவுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
English Summary
leave to puthuchery courts for high court justice dead