சீர்காழியில் நீதிமன்றத்தை புறக்கணிக்கும் வழக்கறிஞர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சீர்காழியில் நீதிமன்றத்தை புறக்கணிக்கும் வழக்கறிஞர்கள் - நடந்தது என்ன?

பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் மதுரை வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் தனது வழக்காடிகளுக்காக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், காவல்துறை அதிகாரி பல்வீர்சிங் என்பவர் மீதான வழக்குகளில் முனைப்புடன் செயல்பட்ட காரணத்திற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் மகாராஜனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால்  போடப்பட்ட  வழக்கில் குற்றவாளிக்காக ஆஜராகி வழக்கு நடத்தி வரும் மதுரை வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் உள்ளிட்டோர் மீது பொய்யான காரணங்கள் கூறி அவர்களும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதனைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் இன்று சீர்காழி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற பணியில் இருந்து ஒரு நாள் விலகி இருப்பதாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் முடிவெடுத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lawyers protest in seerkazhi against police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->