மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய லேப் டெக்னீசியன்.!
lab tecnician arrested for harassment in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதுபோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி ஆண்டனி சுரேஷின் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 22ம் தேதி போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதற்கிடையே அங்கு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு லேப் டெக்னீசியன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இரண்டு பேர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திற்கு இணையதளம் மூலமாக தனித்தனியாக மனு அனுப்பி உள்ளனர். இதையடுத்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் வைரவன் என்பவர் மீது கோட்டார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் போலீசார் வைரவனை கைது செய்தனர். இவருக்கு வரும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அவர் பாலியல் புகாரில் சிக்கி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
lab tecnician arrested for harassment in kanniyakumari