உடுப்பி | சக மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த கல்லூரி மாணவிகள்! நடிகை குஷ்பு நேரில் விசாரணை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 3 பேர் கழிவறையில் கேமிராவை பொருத்தி ரகசியமாக சக தோழிகளை ஆபாச படம் பிடித்து அவர்களது ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி இருக்கிறார்கள். 

இந்த வீடியோ வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கல்லூரி நிர்வாகம் 3 மாணவிகளையும் 3 சஸ்பெண்டு செய்தது. இந்த விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, இதற்கான உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். 

இந்நிலையில் தாமாக முன் வந்த மல்பே நகர போலீசார், குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த விவகாரம் குறித்து அறிந்த கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவிக்கையில், இந்த விஷயத்தை வைத்து பா.ஜனதா குட்டி அரசியலை நடத்துகிறது. இது போன்ற விவகாரங்கள் நண்பர்களுக்கு இடையே நடந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா? இதெல்லாம் கடந்த காலங்களில் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடக்கவில்லையா? என தெரிவித்தார்.

இதனால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு, இந்த விவகாரம் குறித்து நேரில் சென்று விசாரிப்பதற்காக உடுப்பி சென்றுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kushboo Udupi private college inspection


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->