அடிதடி வழக்கு! கும்பகோணம் திமுக நிர்வாகி தலைமறைவு! மூன்று பேர் கைது!
Kumbakonam thiruvalansuzhi DMK kamaraj case
கும்பகோணம் அருகே முன்பகை காரணமாக இளைஞர் ஒருவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுக செயலாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது உறவினர் விஷ்ணு என்பவருடன், நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்களை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி, அன்பரசன், தேவராஜ் மற்றும் காமராஜ் ஆகிய நான்கு பேர், ரஞ்சித்தின் உறவினர் விஷ்ணுவை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரஞ்சித் சுவாமிமலை காவல் நிலையத்தில் எதிர் தரப்பு மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிரஞ்சீவி, அன்பரசன், தேவராஜ் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருவலஞ்சுழி திமுக செயலாளராக உள்ள காமராஜரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Kumbakonam thiruvalansuzhi DMK kamaraj case