சிறுமி மரணம் - கிருஷ்ணகிரி தனியார் குளிர்பான ஆலையில் அதிகாரிகள் ஆய்வு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த கனிகிளிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் ஐந்து வயது மகள் காவியாஸ்ரீ அரசு தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், காவியாஸ்ரீ  நேற்றைய முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் பத்து ரூபாய் கொடுத்து மாம்பழச் சுவையுடைய குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். 

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிரமியின் மூக்கிலும், வாயிலும் நுரை தள்ளி மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. 

இதனை எடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி காவியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குளிர்பானத்தின் தயாரிப்பு நிறுவனம் கிருஷ்ணகிரியில் ஏங்கி வருவதாக தெரியவந்தது. 

இதனை அடுத்து மத்திய, மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஆலையில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இதே நிறுவனத்தின் குளிர்பானத்தை குடித்த இரண்டு வயது குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து இந்த குளிர்பான ஆலையை மூடுவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. தற்போது ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் குளிர்பானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிறுமி குடித்த குளிர்பானம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishnagiri Cool Drinks death case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->